வசம்பு என்பது ஒரு பிரபலமான இயற்கை மற்றும் மருத்துவ மூலிகையாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், வயிறு வீக்கம், வயிற்று போக்கு போன்றவற்றை போக்க வசம்பு பொடி உதவுகிறது. வசம்பை எரித்து அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடிவயிற்றின் மேல் தடவி வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். வசம்பு பொடியை படுக்கைக்கு அடியிலும் அலமாரிகளின் மூலைகளிலும் தூவினால் பூச்சிகள் குழந்தைகளை அண்டாமல் இருக்கும்.