தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான நேர்காணல் டிசம்பர் 9 முதல் 12 வரை நடைபெறுகிறது. கூடுதல் விவரங்களை 9566239685, 6379179200, 044-22505886, 044-22502267 ஆகிய தொலைபேசி எண்களில் அறிந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.