கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

70பார்த்தது
கல்வி அலுவலக ஆய்வுகளுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 33 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி