சென்னை கண்ணகி நகரில் 'விழுதுகள்' சேவை மையத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.25) திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் தொடர்பான மறுவாழ்வு சேவைகள் வழங்கும் மையம் ஆகும். இது ரூ.3.08 கோடியில் விழுதுகள் சேவை மையம் சீரமைக்கப்பட்ட நிலையில் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தரையில் அமர்ந்து பேசி, விளையாடி மகிழ்ந்தார்.