தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நிறைவடைந்த பின்பு அக்கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பலர் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள செல்வி மஹாலில் மாற்றுக் கட்சியில் இருந்து தமிழக வெற்றி கழகத்தில் நூற்றுக்கணக்கானோர்
இணையும் நிகழ்ச்சி மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
இதில் கூத்தாநல்லூர் கோரையாறு வேளுக்குடி லெட்சுமாங்குடி பூதமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் தாங்கள் ஏற்கனவே பயணித்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். குறிப்பாக திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இவர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட மாணவரணி தலைவர் ஆனந்த் தலைமையில் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அனைவருக்கும் மாவட்ட மாணவரணி தலைவர் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். நிகழ்சியின் இறுதியில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் சதீஷ் பசுபதி மகளிர் அணி நிர்வாகிகள் வினோதா மணிமேகலை உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.