புதுக்கோட்டையில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதனை திமுக அரசு அதன் அதிகாரத்தைக் கொண்டு மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்திற்குரியது” என குறிப்பிட்டுள்ளார்.