ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2008ம் ஆண்டுக்கு பிறகு பெர்த் மைதானத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்கள், ஆஸ்திரேலியா 104 ரன்கள் எடுத்தன. 2வது இன்னிங்சில் 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 534 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்நிலையில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.