மேலவிடையல் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..

58பார்த்தது
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள மேல விடையல் கிராமத்தில் இரண்டு வாய்க்கால்களுக்கு இடையே உள்ள இடத்தில் கழிவறை, குடிசை போட்டு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனை அகற்ற அப்பகுதி மக்கள் அரசு கோரிக்கை இருக்கின்றனர்.
வலங்கைமான் அருகே உள்ள கீழ விடையல், மேல விடையல் மற்றும் குப்பசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் இருந்து பாசனத்திற்கு கிளை வாய்க்கால் மூலமாக தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில். , கடந்த சில வருடங்களாகவே பாசனத்திற்கு தண்ணீர் சரிவர கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அப்பகுதியில் உள்ள இரண்டு வாய்க்கால்களையும் தூர்வாராத நிலையில் தண்ணீர் வரவில்லை.
இந்த நிலையில். இரண்டுஅ வாய்க்கால்களின் இடையே இருந்த இடத்தில் கழிவறை கட்டி குடிசை போட்டு தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிலும மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை தூர்வாரி,
குப்பசமுத்திரம் பகுதியில் தடுப்பணை ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி