தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.