இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடத் தயாராகி வருகிறார். இரண்டாவது குழந்தை பிறந்திருந்ததால் மும்பையில் தங்கியிருந்த அவர், பெர்த்தில் நடந்த முதல் போட்டியை தவற விட்டார். இந்நிலையில் நேற்று அணியுடன் இணைந்துகொண்ட ரோஹித், வலைப்பபயிற்சி செய்யும் போட்டோ வெளியாகியிருக்கிறது. வரும் 30ஆம் தேதி கான்பெர்ராவில் நடைபெறும் போட்டியில் ரோஹித் பங்கேற்பார்.