ஆடுதுறையில் பா. ம. க. வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறையில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் ம. க. ஸ்டாலின் செய்திருந்தார்.
தமிழகம் முழுவதும் நடப்பு சம்பா நடவு, நெற்பயிர்களுக்கு பயர்காப்பீடு செய்ய வழங்கப்பட்ட தேதி 15. 11. 2024-லிருந்து, மேலும், ஒரு மாதம் கால அவகாசம் நீட்டித்து வழங்க மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.