நீதிமன்றத்தில் ஆஜராகாத டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்

71பார்த்தது
கொலை வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத
தேவாலா டி. எஸ். பிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

தஞ்சாவூர் மாவட்டம் சோழபுரம் பகுதியை சேர்ந்த மாயன் (என்ற) சுந்தரம். இவர் கடந்த 2016ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதே போல் சுந்தரத்தின் மகன் சுகுமார் கடந்த 2018ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த இரண்டு கொலை வழக்கு தொடர்பாக திருப்பனந்தாள் போலீஸ் ஸ்டேஷனில், அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றியசரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.


இவ்வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக, வழக்கின் விசாரணைக்கு, சரவணனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. தொடர்ந்து பல முறை இந்த வழக்கு விசாரணைக்கு இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன் ஆஜராகாதால், வழக்கை விசாரித்து நீதிபதி ராதிகா, விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளர் சரவணனை பிடிக்க பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டராக இருந்த சரவணன், தற்போது நீலகிரி மாவட்டம் தேவாலா சரக டி. எ. ஸ். பி. , யாக பணியாற்றி வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி