லாரியில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி..

50பார்த்தது
பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து
தனிப்படையினர் பேராவூரணி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  
அப்போது, வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் பேராவூரணியில் இருந்து  முடச்சிக்காடு பகுதியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் பசுபதி மற்றும் தனிப்படையினர் லாரியை வழிமறித்து விசாரணை நடத்தினர். அதில் ரகசிய அறை அமைத்து சுமார் 330 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.  
அதனை பின் தொடர்ந்து சொகுசு காரில் வந்தவர்களையும் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் தஞ்சாவூர் எஸ். பி ஆசிஷ் ராவத், ஒரத்தநாடு ஏஎஸ்பி சஹனாஸ் இலியாஸ், பட்டுக்கோட்டை டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.  இதில் லாரி ஓட்டுநர் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊத்துமலை பெரமராஜ் (வயது 34), கஞ்சா கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த பேராவூரணி அருகே உள்ள காரங்குடா பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரான அண்ணாதுரை (44), கஞ்சாவை பதுக்கி வைக்க உதவியதாக அம்மணிசத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா (60) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.  
இதில், தஞ்சாவூர் கருப்பையா (52). என்பவர் இவர்களை இயக்கியதும் தெரிய வந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி