முத்துப்பேட்டையில் சந்தனக்கூடு விழா கோலாகலம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சேக் தாவூத் தர்காவில் 732வது கந்தூரி விழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை 2 மணி அளவில் தொடங்கியது. முன்னதாக சந்தனக்குடங்களை தர்கா அறங்காவலர்கள் ஊர்வலமாக எடுத்துவந்து சந்தனக்கூட்டில் வைத்தனர். பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் கொலகலமாக நடைபெற்றது.