திருமேனிஏரி பகுதியில் வீடுகளை ஆய்வு செய்த அமைச்சர் TRB. ராஜா

74பார்த்தது
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே திருமேனிஏரி எனும் கிராமம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் மக்கள் பழுதடைந்த வீடுகளில் வாழ்ந்தனர். புதிய வீடு கட்டித்தர இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது சுமார் 2 கோடியை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இங்கு வசிக்கும் நரிக்குறவ குடும்பங்களுக்கு 51 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை தமிழக தொழிற்துறை அமைச்சர் டி. ஆர். பி. ராஜா நேரில் பார்வையிட்டு நடைபெற்று வரும் பணி குறித்து கேட்டரிந்தார். வீடுகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி