திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே திருமேனிஏரி எனும் கிராமம் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கும் மக்கள் பழுதடைந்த வீடுகளில் வாழ்ந்தனர். புதிய வீடு கட்டித்தர இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது சுமார் 2 கோடியை 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 51 வீடுகள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.