நீலகிரி மாவட்டம், கக்குச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தீனட்டி நடவரை கிராமத்தில் உள்ள மக்கள் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்களுடைய மூதாதையர் காலம் முதல் இன்றுவரை சைவ உணவையே உட்கொள்கிறோம். நாங்கள் சைவ உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறோம். எங்களுடைய கிராமத்தில் யாருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு என்பதே இல்லை" என்று கூறுகின்றனர்.