எழிலூரில் நீர் நிலையை பாதுகாக்க பனை நடு விழா

78பார்த்தது
எழிலூரில் நீர் நிலையை பாதுகாக்க பனை நடு விழா
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட எழிலூர் கிராம பஞ்சாயத்தில் பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் 2500 பனை விதைகள் விதைப்பு விழா நடந்தது. திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் முன்னிலை வகித்தார். மேலும், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் கூறுகையில், இவ்வாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் நீர் நிலைகள் மேம்படுத்தும் விதமாக பனை விதைகள் எழிலூர் கிராமம் செல்லியம்மன் கோவில் அருகில் சாலையில் விவசாயி வயலில் உள்ள அருகாமையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி