திருமக்கோட்டை அருகே திருமேனி ஏரி கிராமத்தில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச வீடுகள் கட்டும் பணி நடைபெற்ற வருகிறது. இதனை ஆய்வு செய்வதற்காக தமிழக தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ ஆகியோர் நேரில் பார்வையிட்டனர் 30 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படுவதால் சந்தோஷமடைந்த ந்த எங்கள் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பி அவர்களின் செல்போனில் செல்பி எடுக்க முயன்றனர் உடனே அமைச்சர் டி ஆர் பி ராஜா அவர்களின் செல்போனை வாங்கி அங்கிருந்த பெண்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.