

மன்னார்குடியை அதிர வைத்த பலத்த சப்தம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் இன்று (மார்ச் 27) மதியம் 2.40 மணியளவில் பலத்த இடி போன்ற சத்தம் கேட்டது. இந்த பெரும் சத்தத்தால் வீட்டிலிருந்த பொருட்கள் அதிர்வடைந்தன. மன்னார்குடி மட்டுமின்றி 15 கிலோ மீட்டர் தூரம் வரை வடுவூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இந்த சத்தம் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர். மேலும் வானில் இருந்து வந்த இந்த சத்தம் என்னவாக இருக்கும் என தெரியாததால் மக்கள் பதற்றம் அடைந்தனர்.