தெற்குபடுகையில் மின் வெட்டை சீர் செய்ய கிராம மக்கள் கோரிக்கை

55பார்த்தது
மன்னார்குடி அருகே தெற்குபடுகை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு தற்போது மன்னார்குடியில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின்கம்பிகள் கோரையாற்றின் குறுக்கே வயல் மற்றும் புதர்களுக்கு இடையே செல்வதால் மழைக்காலங்களில் மின் கம்பிகளில் மரங்கள் சாய்ந்து மின் இணைப்பில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மின்வாரிய அதிகாரிகள் தெற்குபடுகை கிராமத்திற்கு மின் இணைப்பை துண்டித்து விடுகின்றனர். காலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் இந்த கிராம மக்கள் இரவு நேரங்களில் மின்சாரம் இன்றி தூங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். தெற்கு படுகை கிராமத்திற்கு அருகே கோட்டூர் மின்வாரிய அலுவலகம் உள்ளதால் கோட்டூர் பகுதியில் இருந்து தங்கள் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்

தற்போது மழைக்காலம் தொடங்கிய நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்படுவதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முயன்றனர் தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி