திருத்துறைப்பூண்டி அருகே கொற்கையில் கால்நடை பண்ணையை சிப்காடாக மாற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ததாக கூறி விவசாயெகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாடுகளுடன் கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.