திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கோலாகலம்

முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் 32வது ஆண்டாக வெற்றி விநாயகர் ஊர்வலம் நேற்று(செப்.14) மாலை நடைபெற்றது. ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்பட்டது. ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு பாமினி ஆற்றில் இரவு 7 மணிக்கு கரைக்கப்பட்டது. முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டும், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டும் உள்ளது. ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ. ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன் மற்றும் 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வீடியோஸ்


திருவாரூர்