
திருத்துறைப்பூண்டி அழகு நாட்சியம்மன் கோவில் திருவிளக்கு பூஜை
திருத்துறைப்பூண்டியில் உள்ள அழகு நாட்சியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரமாக வைகாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெற்று பின்னர் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் திரளான பெண்கள் பங்கேற்று திருவிளக்கை அம்மனாகப் பாவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.