புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மேலதெத்தமுத்துப்பட்டியை சேர்ந்த கருப்பையா (50), மகினா ஸ்ரீ (08) இருவரும் பைக்கில் நமண சமுத்திரத்திலிருந்து சென்று கொண்டிருந்தபோது, இளங்குடி பட்டி கண்மாய் அருகே எதிரே வந்த பசு மாட்டின் மீது மோதினார். இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகினா ஸ்ரீ பலத்த காயமடைந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.