மன்னார்குடி சர்ச்அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் தஞ்சையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நீடாமங்கலம் பகுதியைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 லட்ச பணம் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பித் தருமாறு தொடர்ந்து பாலகிருஷ்ணன் வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஓர் ஆண்டிற்கு முன்பு திருமுருகன் 11 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார். மீதம் உள்ள 4 லட்ச ரூபாயை தரவேண்டும் என பாலமுருகன் திருமுருகனிடம் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளார். பணம் தருவதற்கு காலதாமதமானதால் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை ஜம்புநாதன் அவரது மகள் ரோகினி மற்றும் நெடுவாக்கட்டையைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய நான்கு நபர்களும் சேர்ந்து பாலகிருஷ்ணனை பணம் கொடுக்குமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான
திருமுருகன் தனது இறப்பிற்கு பாலகிருஷ்ணன் ரோகிணி தர்மராஜ் ஜம்புநாதன் உள்ளிட்ட 4 பேர் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன்னார்குடி போலீசார் இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக பாலகிருஷ்ணன் அவரது மகள் ரோகினி மற்றும் நொடுவா கோட்டை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமுறைவாக உள்ள பாலகிருஷ்ணனின் தந்தை ஜம்புநாதனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.