மன்னார்குடியில் நண்பனின் நினைவு தினத்தில் ரத்ததானம் செய்த நண்பர்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சேரன்குளம் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பரத் கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து மன்னார்குடி தரணி பள்ளியில் ரத்ததான முகாம் ஒன்றை நடத்தினர் இதில் உயிரிழந்த புகைப்பட கலைஞர் பரத்தின் நண்பர்கள் இளைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று ரத்தத்தை தானமாக வழங்கினார்.