மன்னார்குடியில் ஹனுமன் வாகனத்தில் சுவாமி உலா

80பார்த்தது
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி திருவிழா கடந்த 18 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது நாள்தோறும் ராஜகோபால சுவாமி பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு 13 வது நாளாக வெள்ளி ஹனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி ராமர் திருக்கோளத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய விழாவான தேர் திருவிழா அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி