இந்திய தேசிய ராணுவ குடும்பங்கள் சந்திப்பு விழா மன்னார்குடியில் நடைபெற்றது. இந்திய தேசிய ராணுவ வீரர்கள் அவர்களின் குடும்பங்கள் குறித்த புத்தக அறிமுக விழா மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட காலங்களில் ஐ.என்.ஏ.வில் பணியாற்றிய வீரர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து தொகுக்கப்பட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய 'வியர்வை இரத்தம் கண்ணீர்' எனும் புத்தகம் மற்றும் 'ஐ.என்.ஏ வேர்களை தேடி' புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அறிமுக விழாவில் ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கள்ளர் மகா சங்க தலைவர் பாண்டியன் மணி நேர விதித்தார். நூல் ஆசிரியர் குமரேசன் புத்தகம் குறித்து நீண்ட விளக்க உரையாற்றினார். தென்னிந்திய ஆய்வு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன் சிறப்புரையாற்றினார்.