நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் வடக்கு ஒன்றிய பகுதிகளில் இன்று அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற 2026 ஆம் வருடம் தமிழக சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழகம் முழுதும் 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் தலைமையில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. குடவாசல் வடக்கு ஒன்றிய பகுதிகளான கூந்தலூர், கடலங்குடி, மருத்துவக்குடி, விஷ்ணுபுரம், ஆலத்தூர், கடககுடி பரவாக்கரை, வயலூர் உள்ளிட்ட 25 ஊராட்சிகளில் உள்ள 52 பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டங்கள் 9 இடங்களில் காலை முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் "ஐஸ்கிரீம் மிட்டாய் விற்பது போல பள்ளிகளின் வாசலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது என்று குற்றம் சுமத்தினார். இது தொடர்ந்தால் பெரும் ஆபத்தில் முடிந்து விடும் அதனால் தான் 2026 ஆம் வருடம் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர் என பேசினார்.