மன்னையில் பிஆர். பாண்டியன் பேட்டி

85பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் விவசாயிகள் தர்பூசணியை சாகுபடி செய்து கிலோ ஒன்று மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் குளிர்பானங்கள் இலகுவாக கிடைக்கும் வகையிலும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் வேளாண் உற்பத்தி பொருளான தர்பூசணியில் ஊசி மூலமும் கலர் திரவங்களை ஏற்றி கலப்படம் செய்வதாக பொய் பிரச்சாரங்களை செய்வதால் தர்ப்பூசணியை பயிரிட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று தர்பூசணி விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பி. ஆர். பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி