திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்த இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ''பெண்களின் மனங்களையும், மக்களின் மனங்களையும் புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் திமுக அமைச்சர் பொன்முடி ஆபாசமாகப் பேசி இருக்கிறார். அவரைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில், வரும் ஏப்ரல் 16ஆம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.