முத்துப்பேட்டை அருகே பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் பனியின் போது காவல் உதவி ஆய்வாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா பெருகவாழ்ந்தான் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் பணிபுரிந்து வருகிறார். இன்று இவர்பணியின் பொழுது ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்த வாந்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு சித்தமல்லி ஆரம்ப அரசு சுகாதார நிலையத்திற்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு ராஜேந்திரனை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதன் பிறகு அவரது உடல் அவருடைய சொந்த ஊரான முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.