திருத்துறைப்பூண்டி வட்டம் திருவலஞ்சுழி தகரவெளி கிராமத்தில் எழுந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதளுடன் தொடங்கி ஒரு வார காலம் சிறப்பு பூஜைகள் தினம் தோறும் சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது. இன்று தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் திமிதி திருவிழாவில் பங்கெடுத்தனர் சுமார் 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவடைய வேண்டி பாடை காவடி எடுத்தும் பால்குடங்கள் உயிர் சேவல் காணிக்கை முடி இறக்குதல் உள்ளிட்ட காணிக்கைகளை அம்மனுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆலயம் எதிரே வளர்க்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் பால்குடங்களுடனும் கை குழந்தைகளுடனும் பக்தர்கள் தீயில் இறங்கி அம்மனுக்கு தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினர்.
அவனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாக்கும் வழிக்கும் விதமாக பல்வேறு முன்னேற்பாடுகள் மாவட்ட காவல்துறையின் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்டம் முழுவதிலிருந்து சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு புற்றடி மாரியம்மன் ஆலய பங்குனி தீமிதி திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்றுச் சென்றனர்.