பேரளத்தில் நூலகத்தை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் காமராஜ்

67பார்த்தது
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட பேரளம் பகுதி மக்கள் நீண்ட நாட்களாக நூலகம் வேண்டி கோரிக்கை வைத்தனர்.
அதனை நிறைவேற்றும் வகையில்
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிதாக நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை
தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர். காமராஜ் தனது தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடத்தை இன்று ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட நூலக அதிகாரிகள், நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் சி. பி. ஜி. அன்பழகன், பேரளம் நகர செயலாளர் திலகம் சுந்தரமூர்த்தி , தகவல் தொழில்நுட்ப மண்டல இணைச் செயலாளர் செல் சரவணன், சம்பத், சுவாதி கோபால் மற்றும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி