மன்னார்குடியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

51பார்த்தது
மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்த நிலையில் வானிலை மைய அறிவிப்பின் படி இன்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது இந்த மழையால் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி நின்றது மன்னார்குடி கருவாக்குறிச்சி மேலவாசல் ஆதிச்சபுரம் மேலவாசல் பாமணி உள்ளிட்ட மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து மன்னார்குடி பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி