
திருவாரூர்: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், சரண்டர் விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலன்களை வழங்குதல், இடைநிலை மற்றும் முதுகலை ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஏப்ரல் 3) மாலை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஈவேரா, அரசு அலுவலர்கள் ஒன்றியத்தின் மாநில துணைச் செயலாளர் வாசுகி, தமிழ்நாடு அரசு அடிப்படை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ராஜசேகர், மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ரஜினி, அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மணிகண்டன், தேசிய ஆசிரியர் சங்க மாவட்டப் பொறுப்பாளர் தமிழ்க்காவலன், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, ஐயப்பன், பாலசுப்பிரமணியன், செல்வமணி, வேதமூர்த்தி, தங்கபாபு, ஜெயசீலன் பாலகிருஷ்ணன், மார்ட்டின், சரவணன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்துகொண்டனர். இதில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்ட நினைவில் கூட்டணி மாவட்டப் பொருளாளர் சுபாஷ் நன்றி கூறினார்.