பாடகச்சேரியில் மனநலம் பாதித்தபெண்ணை சீரழித்த இளைஞர் தலைமறைவு

63பார்த்தது
வலங்கைமான் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை ஆசை கூறி சீரழித்த நபர் தலை மறைவு. வழக்கு பதிவு செய்து தேடிவரும் காவல்துறை


திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பாடகச்சேரி, சொரக்குடி பகுதியில் வசிக்கும் ரமேஷ் - பூங்கொடி தம்பதியருக்கு 20 வயது மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை, மேலும், இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்.
இந்த நிலையில், அதே பகுதியை சார்ந்த சங்கர் என்பவரின் மகன் கேசவன் என்பவர், இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி ஆறுமுறை பாலியல் ரீதியாக உறவு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த இளம் பெண்ணின் தாயான பூங்கொடி வலங்கைமான் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வலங்கைமான் காவல்துறையினர் கேசவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கேசவன் தலைமறைவாகியுள்ளார். வலங்கைமான் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள கேசவனை வலை வீசி தேடி வருகின்றனர்.
தொடர்ந்து திமுக ஆட்சியில் போதை பொருட்களில் புழக்கம் அதிகமாக உள்ளதால் பாலியல் ரீதியான குற்றங்கள். தினம் தோறும் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை அடைகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி