திருத்துறைப்பூண்டி - Thiruthuraipoondi

மன்னார்குடி கோட்டாச்சியார் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி நகராட்சி நிறுவாகம் நீர் நிலையை ஆகிராமித்து குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி மன்னார்குடியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 1960 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட குடிநீர் பஞ்சத்தைப் போக்க குடிநீர் குளம் ஒன்று வெட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. காலப்போக்கில் அந்த குடிநீர் குளம் தூர்ந்து போன நிலையில் மன்னார்குடியில் உள்ள மண்ணின் மைந்தர்கள் என்ற பொது நல அமைப்பு மீண்டும் குளத்தி்தை தூர்வாரி தண்ணீர் சேமிக்க வழி செய்தது. அந்த ஏரியைச் சுற்றி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதி குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளது. இந்நிலையில் மன்னார்குடி நகராட்சி நிர்வாகம் தற்போது குப்பைகளை இந்த குளத்தில் கொட்டி வருகிறது. இதனை கண்டித்து நல்ல தண்ணீர் நீர்த்தேக்க பாதுகாப்பு குழு சார்பில் இன்றைய தினம்(அக்.17) மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக மன்னார்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த இளைஞர்கள் மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நீர்நிலையில் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

வீடியோஸ்


திருவாரூர்