மன்னார்குடியில் பாஜக சார்பில் இரத்த தானம்

68பார்த்தது
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 74ஆவது பிறந்தநாள் விழா இன்று(செப்.17) கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தேரடி சக்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் பாஜகவினர் இரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஓபிசி அணி தலைவர் பால பாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அறிவு ராம், மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் கமலுதீன், மாவட்ட ஆன்மீக பிரிவு துணை தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி