கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி டிஎன் 28 ஏடபுல்யு 2122 என் கொண்ட லாரி சென்றுக்கொண்டிருந்தது லாரியை திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் முருகூர் அஞ்சல் கோணப்பாதை பகுதியை சேர்ந்த ராமசாமி வயது 45 என்பவர் ஓட்டி வந்தார் என் என் நாரையூர் அருகில் வந்துகொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது விபத்தில் லாரி ஓட்டுநர் இடிபாடுகளில் சிக்கிக் தவித்தார் தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புதுறையினர் விரைந்து சென்று ஓட்டுநரை ஜேசிபி உதவியுடன் உயிரோடு மீட்டு 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.