அதிமுக தற்போது சரியாக இல்லை என சசிகலா விமர்சித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியை வலுப்படுத்த நிறைய செய்யவேண்டியிருப்பதாகவும், கட்சியை வலுப்படுத்தி 2026-இல் மக்களாட்சி அமைக்கப்போவதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டதுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிய இருந்த நிலையில், கட்சி சரியாக இல்லை என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.