நாளை மின்நிறுத்தத்தை ஒத்தி வைக்க வேண்டும் பள்ளிகள் கோரிக்கை

57பார்த்தது
மன்னார்குடியில் நாளை சனிக்கிழமை மின்சார பராமரிப்பு பணி மேற்கொள்வதை ஒத்தி வைக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காலாண்டு தேர்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது. நாளைய தினம் சனிக்கிழமை தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மன்னார்குடி பகுதியில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாளை தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி சனிக்கிழமை நடைபெற உள்ள மின் பராமரிப்பு பணிகளை ஓத்திவைத்து மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி