பள்ளி கட்டிடத்தைதிறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து

64பார்த்தது
25 லட்சம் மதிப்பிலான புதிய அரசு பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்

திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் அருகே உள்ள புழுதிகுடி பல்லவராயன் கட்டளை காரியமங்கலம் மஞ்சவாடி ஆலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளிக்கு போதிய கட்டிட வசதி இல்லாததால் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சார்பாக பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்போது ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது மேலும் கட்டிடத்தின் உள்ளே மாணவர்களின் கல்வித் தரத்தை ஊக்கு விக்கும் விதமாக கணிதம் பொது அறிவு மனித உடலின் செயல்பாடுகள் உள்ளிட்டவை அடங்கிய ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது

மேலும் இந்த கட்டிட திறப்பு விழாவானது திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு திறந்து வைத்தார் இந்நிகழ்வில் பள்ளியின் மாணவர்கள் பெற்றோர்கள் பள்ளியின் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி