மன்னார்குடி அருகே கோட்டூரில் ஆர். எஸ். எஸ் ஊர்வலம் நடைபெற்றது.
விஜயதசமி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் இன்று ஆர். எஸ். எஸ் ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் நேற்று மாலை 4 மணிக்கு கொழுந்தாழை மாரியம்மன் கோவிலில் இருந்து ஆர். எஸ். எஸ். ஊர்வலம் தொடங்கியது. 250 க்கும் மேற்பட்ட ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் சீருடை அணிந்து நீண்ட வரிசையில் அணிவகுத்து சென்றனர். புதுதெரு, கீழ வீதி, வடக்கு வீதி சன்னதிதெரு, கடைத்தெரு வழியாக பேரணி பொதுக்கூட்ட மேடையை வந்ததைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கள்ளர் மஹா சங்க மாநில தலைவர் பாண்டியன் மணியர் தலைமை வகித்தார். வளரும் தமிழகம் கட்சி மாநில அமைப்பு செயலாளர் சரவணன் சோழன், பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மடாதிபதி சுவாமி கொரக்ஸனந்தா ஆசியுறை வழங்கினார். சங்கத்தின் மாநில பொறுப்பாளர் முத்துசாமி , பாஜக கோட்ட பொறுப்பாளர்கள் பேட்டை சிவா, சி. எஸ். கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் வி. கே. செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.