திருவண்டுதுறையில் அரசுப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

85பார்த்தது
சோழங்கநல்லூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று(செப்.24) இரவு இருசக்கர வாகனத்தில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது சோழங்கநல்லூரில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணமூர்த்தி திருவண்டுதுறை கிராமத்திற்கு வந்த போது எதிரே வந்த அரசுப் பேருந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளனது. இதில் கிருஷ்ணமூர்த்தி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி