நன்னிலம் அருகே பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் கல்வி தெய்வமாம் சரஸ்வதி தேவிக்கு என்று தென் இந்தியாவிலேயே தனியாக ஒரே கோவில் மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
சரஸ்வதி அருள் பாலித்து வரும் கூத்தனூர் ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்க பெற்று ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கூத்தனூர் என பெயர் பெற்றது.
இவ்வாறு சிறப்பு மிக்க இக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இன்று காலை சரஸ்வதி தேவியின் பாத தரிசனம் நடைபெற்றது.
இந்த விழாவில் திரளான பக்தர்கள் வருகை புரிந்து சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் நோட்டு புத்தகம் பேனா சிலேட்டு போன்றவற்றை சரஸ்வதி அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நாளை விஜயதசமி முன்னிட்டு வித்யா ஆரம்பம் நிகழ்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.