மன்னார்குடியில் புதருக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாமணி ஆற்றிக்கு அப்பகுதியினர் குளிக்க சென்ற போது அருகில் உள்ள புதருக்குள் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் புதருக்குள் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடைப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் மேற்கொண்ட விசாரனையில் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருப்பது விசாரனையில் தெரியவந்தது. உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து மன்னார்குடி காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.