நன்னிலம்: ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் தேரோட்டம்

76பார்த்தது
நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் எமதர்மராஜனுக்கும் சித்திரகுப்தனுக்கும் தனி சன்னதி அமைந்துள்ள ஒரே கோவிலாக விளங்கி வருகிறது. அவ்வாறு சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில் இந்த வருட திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றுடன் மாசி மாத விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று வாஞ்சிநாதர் மற்றும் மங்களாம்பிகை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலில் இருந்து எழுந்தருளிச் செய்யப்பட்டு 40 அடி உயரமுள்ள தேரில் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

மழையை கூட பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேரானது கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக நான்கு வீதிகளிலும் வலம் வந்து நிலை அடைய வந்து சேர்ந்தது. மேலும் நன்னிலம் காவல்துறையினர் சார்பில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 100 வருடங்களுக்கு முன்பு வாஞ்சிநாதசுவாமி தங்க சப்பர தேரில் எழுந்தருளிச் செய்யப்பட்டு தேரோட்டம் நடைபெறும். 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய மரத்தேர் செய்யப்பட்டு அதில் இன்று தேரோட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி