மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி இன்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியை கோமதி வரவேற்றார் நிகழ்ச்சிகள் விஜயஸ்ரீ அழகு நிலையத்தின் நிறுவனர் விஜயா நல்லதம்பி, தலைமை வகித்தார். பிரிய ஶ்ரீ அழகு நிலையத்தின் நிறுவனர் பானுமதி, பள்ளி ஆசிரியை மேகலா, முத்து லக்ஷ்மி, பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜலக்ஷ்மி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். முன்னதாக கேக் வெட்டியும் மாணவர்களின் பெற்றோருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.